மாணவிகளிடம்  பாலியல் பேரம் பேசிய கல்லூரி பேராசிரியை மீது விசாரணை!

தமிழகம்
Typography

சென்னை, ஏப்.17-  கல்லூரி மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரம் அமபலமானதை அடுத்து அவர் மீதான உயர் மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்

விருது நகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப்பிரிவு பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

விருதுநகர் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்து உயரதிகாரிகளுடன் படுக்கையை பங்கிட்டு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதற்காக கல்லூரித் தேர்வுகளில் சலுகைகள் பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இது தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் அம்பலத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவிகளை தவறாக வழி நடத்தியதாகக் மேற்கூறப்படும் பேராசிரியையை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.அவர் மீது  காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் புகார் அளித்திருந்தது

அத்துடன் அவரை கைது செய்யக் கோரி மாணவர்களும்  பெற்றோர்களும் மகளிர் அமைப்பினரும் கல்லூரி முன் கூடி முழக்கமிட்டனர். இதையடுத்து நிர்மலாதேவி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்

நிர்மலா தேவியின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர்.அவர் வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருப்பதாகவும் தகவல் வெளியானது.இந்நிலையில் பூட்டை அதிரடியாக உடைத்து அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

இதுகுறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அறிக்கையில் கூறுகையில் குற்றவாளிகள் யாரும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர் சந்தானம் விசாரணை நடத்துவார் என ஆளுநர் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சந்தானம் தமிழக அரசின் தலைமை செயலாளர் அந்தஸ்த்தில் இருந்து ஓய்வு பெற்றவர். மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உறுப்பினராக உள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS