மின்சாரம் இன்றி பழுதான வாக்களிப்பு இயந்திரம்!

தமிழகம்
Typography

சென்னை, மே 16- தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளை மற்ற 232 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதைத் தொடர்ந்து நாகையில் மழை பெய்து வருவதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கைப்பேசி விளக்கில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரத்திலும் மழை பெய்து வருவதால் மின் இணைப்பு துண்டிப்பால் மெழுகுவர்த்தி வெளிச்சம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதியில் மின்சாரம் இல்லாததால் வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS