85 ஆண்டுகளுக்குப் பிறகு கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில்  கும்பாபிஷேகம் 

தமிழகம்
Typography

அரியலூர்,  பிப்ரவரி 2-    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்  எனும் ஊரில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கங்கை கொண்ட சோழபுரம்  பிரகதீஸ்வரர் ஆலயத்தில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது. 

உலகப் புராதனச் சின்னமாக  யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ள  இந்த ஆலயம், வீரத்தை நிலைநாட்டிய ராஜேந்திர சோழனின் நினைவாகக் கட்டப்பட்டதாகும்.   சோழர் கால கட்டிட  கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக இந்த இந்த ஆலயம் திகழ்கிறது.   

இந்த கோவிலில் வீற்றிருக்கும் சோழீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடத்த இரண்டு தலைமுறையாக முயற்சிகள் நடந்தன. எனினும், தற்போது 85 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் வெற்றிகரமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS