சென்னை ஏப்ரல்.17- இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத் தர தினகரனிடம் லஞ்சம் வாங்கிய நபர் கைதாகிவிட்ட நிலையில், தினகரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லஞ்சம் விசாரணையில் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று டெல்லி போலீஸ் அறிவித்தது. அதிமுக-வின் சின்னமான இரட்டை இலையைப் பயன்படுத்த கூடாது எனத் தேர்தல் ஆணையம் அன்மையில் தடைவிதித்தது.
இது தொடர்பாக தினகரன் தரப்பும், ஓ.பி.எஸ் தரப்பும் தங்களுக்கு சின்னமாக இரட்டை இலையை ஒதுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு கொடுக்க வேண்டும் என்று தினகரன் சதீஷ் சந்திரா என்பவருக்கு 1.3 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் சதீஸ் சந்திராவை லஞ்சம் பணத்தோடு கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரின் அறையை சோதனை இட்டதில் தினகரன் இவரிடம் பேசியிருப்பதை ஒலிப்பதிவு செய்திருப்பதையும் கண்டுபிடித்தனர்.
எனவே, வலுவான ஆதாரம் இருப்பதால் நாளை சென்னை வரும் டெல்லி போலீசார், டிடிவி தினகரனை கைது செய்வர் என உறுதிப்படத் தெரிகிறது.
"நான் எந்த தவறும் செய்யவில்லை, இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக சதீஷ் சந்திராவிடம் பேசவுமில்லை, லஞ்சமாகப் பணம் கொடுக்கவுமில்லை. கட்சியை அழிப்பதற்காகவே இதுபோன்ற தகவல்களைப் பரப்பிவிடுகின்றனர். அதிமுகவை வேரோடு அழிக்க திட்டம் போடுகிறார்கள். டெல்லி போலீசை நேரடியாக சந்திக்க தயாராகவே இருக்கிறேன்" என்று தினகரன் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னம்: ரூ1.3 கோடி லஞ்சம்! நாளை தினகரன் கைதா?
Tools
Typography
- Font Size
- Default
- Reading Mode