தமிழகத்தில் எந்நேரத்திலும் தேர்தல் வரும்- திருமாவளவன்

தமிழகம்
Typography

ஈரோடு, ஜூன் 14 -  தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க முடியாமல் திணறி வருவதோடு மட்டுமல்லாமல், தங்களுக்குள் மூன்று அணிகளாக பிரிந்து செயல்படுவதால், எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் சூழ்நிலை உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளர்.  

ஆகவே இந்த சூழ்நிலையை ஆளும் மத்திய பாரதிய ஜனதா பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. வரும் அதிபர் தேர்தல் வரை அ.தி.மு.கவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள காய்களை நகர்த்தி வருகிறது.

ஆனால் எப்படி பார்த்தாலும் இந்த ஆட்சியை நடத்துவதுக்கு கடினமான சூழ்நிலையே நிலவுவதால் கூடிய விரைவிலேயே ஆட்சி கவிழும். இனி தமிழ் நாட்டில் எப்போது தேர்தல் வந்தாலும், ஆட்சி அமைக்க  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.   

BLOG COMMENTS POWERED BY DISQUS