சென்னை, ஜூன் 15 – சென்னையில் நடந்த விழா ஒன்றல் நடிகர் விஜய் விவசாயிகளுக்கு ஆதரவாக சொன்ன கருத்தை வரவேற்றதோடு மற்ற திரைப்பட பிரபலங்களும் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய், அண்மை காலங்களில் வறுமையின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாகவும், விவசாயிகளை காக்க அரசு தவறிவிட்டது என்றும் வல்லரசாக இருப்பதை விட விவசாயிகளுக்கான நல்லரசாக இருப்பதுதான் இப்போதைய தேவை எனவும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதை வரவேற்று பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, இவரை போல மற்ற திரைப்பட நடிகர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும், உங்கள் விவசாயிகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘தமிழக முதல்வர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகச் சொல்கிறாரே தவிர, செய்வதில்லை நாங்கள் போராடும் இடத்தில் இருந்து எங்களை அப்புறப்படுத்தவே அரசு நினைக்கிறது எங்களுடைய கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்’ என்றார்.
விஜய் மாதிரி மற்ற நடிகர்களும் ஆதரவு தரவேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
Tools
Typography
- Font Size
- Default
- Reading Mode