இது எல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.. ரஜினியைச் சந்தித்த கஸ்தூரி!

தமிழகம்
Typography

சென்னை, ஜூன் 17- அரசியலிலும் சினிமாவிலும் நிரந்தர எதிரியும் கிடையாது, நண்பனும் கிடையாது என்று யார் சொன்னதோ. அது அப்படியே சூப்பர் ஸ்டார்- நடிகை கஸ்தூரி விவகாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது.  

அண்மையில் சமூக வலைத் தளங்களில் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் கண்டபடி பேசிய கஸ்தூரி, நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். ரஜினி தனது ரசிகர்களைச் சந்தித்தபோது அரசியல் வருவது குறித்து மறைமுகமாக பேசினார் ரஜினி. 

அதனைக் குறித்து பலர் ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து வெளியிட்டனர். அதில் ஒருவர் தான் நடிகை கஸ்தூரி. ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்து பேசிய கஸ்தூரி, ரஜினி ரசிகர்களையும் கீழ்த்தரமாக விமர்ச்சித்தார். அவர்களை நம்பி ரஜினி அரசியல் நடத்தபோகிறாரா என்றும் கிண்டலாக பேசிருந்தார்.

இந்நிலையில் நேற்று திடீரென்று ரஜினியைச் சந்தித்து பேசியுள்ளார் கஸ்தூரி. எதற்காக இந்த சந்திப்பு? என்ன விசயங்கள் பேசப்பட்டன என்ற விவரங்கள் தெரியவில்லை. 

BLOG COMMENTS POWERED BY DISQUS