மகாத்மா காந்தியின் ஓவியம் 27 லட்சத்திற்கு ஏலம்!

பிற மாநிலங்கள்
Typography

டில்லி, ஜூலை.13- லண்டன் சர்வதேச ஏல மையத்தில், பென்சிலால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் “பென்சில் ஓவியம்” ரூ.27 லட்சத்துக்கு ஏலம் போனது. 

இந்தியாவின் விடுதலைக்காக ‘அகிம்சை’ முறையில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய காலம் அது. அப்போது இந்திய தேசம் மட்டுமல்லாது, இங்கிலாந்திலும் காந்தி பிரபலமாகி இருந்தார். அவரின் சுதந்திர போராட்ட அணுகுமுறை அனைவராலும் கவரப்பட்டிருந்தது.

இந்நிலையில் 1931 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற ‘வட்டமேசை’ மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அங்கு சென்றிருந்த காந்தியை சந்தித்த ஜான் ஹென்றி என்பவர், ‛உண்மையின் கடவுள்' என்ற தலைப்பில் வரைந்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஓவியம் தான், ரூபாய் 27 லட்சத்திற்கு ஏலம் போனது.

தற்போது நடந்த லண்டன் சர்வதேச ஏல மையத்தில் காந்தியின் ‘பென்சில்  ஓவியம்’ ஏலத்துக்கு வந்தது. காந்தி மீது பற்று கொண்ட ஒருவர் இந்த ஓவியத்தை 32 ஆயிரத்து 500 பவுண்டுக்கு ஏலம் எடுத்தார். இதன் மதிப்பு சுமார் ரிம.2 லட்சம் ஆகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS