கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி-பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம்!

பிற மாநிலங்கள்
Typography

புதுடில்லி, டிச.12- இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இவர்களது திருமணம் குறித்து பல வதந்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவ்விருவரும் அந்த வதந்திகள் தொடர்பாக எந்தத் தகவலும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தனர்.  

இதனிடையில், நேற்றிரவு அவ்விருவரும், இத்தாலியில் உள்ள மிலான் நகரில் தாங்கள் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக தங்களின் டுவிட்டர் அகப்பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தனர். 

அவ்விருவரின் திருமணமும் பஞ்சாபி முறையில் நடந்து முடிந்துள்ளது. மிலான் நகரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் நடைப்பெற்ற அத்திருமணத்திற்கு, அழைப்பிதழ் கொண்டு வருபவர்களை மட்டும் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதி அளித்தனர் என்று சில தகவல்கள் வெளியாக் உள்ளன.

இதையடுத்து, அழகான வரவேற்பு நிகழ்ச்சியில் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் வரும் 21-ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS