மும்பை கமலா துணி ஆலையில் திடீர் தீ விபத்து: 14 பேர் கருகி மரணம்!

பிற மாநிலங்கள்
Typography

மும்பை, டிச.29- மும்பையின் சேனாபதி மார்க் பகுதியில், லோவர் பரேல் கட்டிடத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கமலா துணி ஆலையின் மூன்றாவது மாடியில் இன்று பின்னிரவு 12.30 மணிக்கு திடீரென தீப்பரவியது. அச்சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

அக்கட்டிடத்தில் தீப்பரவுவதை நேரில் கண்ட பொதுமக்கள் அது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளும், தண்ணீர் லாரிகளும். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். 

அச்சம்பவத்தில் தீப்புண் காயங்களுக்கு ஆளாகிய மேலும் 12 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புப் படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

லோவர் பரேல் கட்டடத்தில்  டைம்ஸ் நவ், டி.வி. 9, ரேடியோ மிர்ச்சி, உணவகங்கள், கேளிக்கை மையங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்த கட்டிடம் 24 மணி நேரமும் பரபரப்பாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS