திருமணச் சேவைக்கு ஒருதலைபட்சமாக ஆதரவா? கூகுளுக்கு கோடிக்கணக்கில் அபராதம்!

பிற மாநிலங்கள்
Typography

புதுடில்லி, பிப்.9- பிரபல திருமணச் சேவை இணையத்தளத்திற்கு ஆதரவாக கூகுள் நிறுவனம் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக புகார் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணை முடிவில் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பிரபல தேடு பொறி நிறுவனமாக விளங்கும் கூகுள், பிரபல திருமண சேவை இணையத்தளம் ஒன்றிற்கு ஆதரவாக நடந்து கொண்டதாக இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் அண்மையில் புகார் செய்யப்பட்டிருந்தது. 

இப்புகார் தொடர்பாக கூகுள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டதோடு, விசாரணையின் இறுதியில் கூகுள் நிறுவனம் பாரபட்சமாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கூகுள் நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டது. 

இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், கூகுள் நிறுவனம் தேடல் நடைமுறைகளில் முறைகேடாக நடந்து கொண்டது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால், பயனர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த அபராதம் விதிக்கப்படுவதாகவும் அபராத தொகையினை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS