காப்பி அடிக்காமல் தடுக்க சிசிடிவி கேமரா; 10 லட்சம் மாணவர்கள் பரீட்சைக்கு வரவில்லை!

பிற மாநிலங்கள்
Typography

லக்னோ, பிப்.10- பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்காமல் தடுக்க சிசிடிவி கேமரா உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை அடுத்து உத்தர பிரதேசத்தில் ஏறக்குறைய 10 லட்சம் மாணவர்கள் பரீட்சைக்குச் செல்லவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உ.பியில் கடந்த 6ஆம் தேதி துவங்கி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இதில் தேர்வு எழுத சுமார் 66 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். 

இந்நிலையில், நேற்று 10ஆம் வகுப்பிற்கான ஆங்கில தேர்வும் 12ஆம் வகுப்பிற்கான கணித தேர்வும் நடந்தன. ஆனால், கடந்த 4 நாட்களாக ஏறக்குறைய 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தவிர்த்துள்ளனர். 

ஒரே நேரத்தில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்வைத் தவிர்த்திருப்பது இதுவே முறையாகும். இதற்கு முன்னர், கடந்தாண்டு அதிகப்பட்சமாக 6.4 லட்ச மாணவர்கள் பொதுத் தேர்வை தவிர்த்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மாநில கல்வித்துறை செயலாளர் நீனா, பலர் தேர்வின் மீதான பயம் காரணமாக தேர்வைத் தவிர்த்திருப்பர். மேலும் மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா, சிறப்பு கண்காணிப்புப் படை, நேரடி ஆய்வு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் பரீட்சைக்கு வராமல் தவிர்த்திருப்பர் என நீனா கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS