ஒரு 'கண்ணசை'வில் 23 லட்சம் பேரை ஈர்த்த பிரியா வாரியர் மீது போலீஸ் புகார்! - (Video)

பிற மாநிலங்கள்
Typography

 திருவனந்தபுரம், பிப்.14- ஒரே நாளில் 23 லட்சம் பேரை 'இன்ஸ்டாகிராமில்' கவர்ந்த இளம் மலையாள நடிகையான பிரியா வாரியரின் அழகிய 'கண்ணடிப்பு' சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே வேளையில்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரியா வாரியரின் மீது   போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

 இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அது அமைந்திருக்கிறதுமலையாள நடிகை பிரியா வாரியர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடலில், பிரியா வாரியர் புருவத்தை உயர்த்தி, சொல்லும் காதல் காட்சி இணையத் தளங்களில் வைரலானது. ஒரே நாளில் 23 லட்சம் பேரை அது அவருடைய இன்ஸ்டாகிராமிற்குள் ஈர்த்துள்ளது. அவர் பலரின் மனங்களையும் கொள்ளையடித்தார். 

இணையத் தளங்களில் மூன்று நாட்கள் இந்த பரபரப்பு நீடித்தது. இருந்து வந்தது. இந்தக் காட்சியில் சக பள்ளித் தோழனான முகமது ரோஷனிடம் புருவத்தை உயர்த்தி பிரியா வாரியர் தனது பிரியத்தை வெளிப்படுத்துவார். 

இந்நிலையில், இந்த பாடல் இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது எனக் கூறி, நடிகை பிரியா வாரியர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ளது.  ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அப்துல் முக்கித் என்பவர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார்.

இதனிடையே இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட காட்சி அல்ல என்று தெரிவித்துள்ள பிரியா வாரியர் இந்தக் காட்சிக்காக அனைவரும் தன்னை பாராட்டியதாகவும், இது இந்த அளவிற்கு சமூக ஊடகத்தில் தனக்கு வெற்றியடையும் என்று நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில் இப்போதோ ஏகப்பட்ட விளம்பரத்தை பிரியா வாரியாரின் இந்தக் 'கண்ணடிப்பு' தேடித் தந்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS