அமைச்சரே இப்படி செய்யலாமா? சாலையோரத்தில் சிறுநீர் கழித்த ராஜஸ்தான் சுகாதார அமைச்சர்!

பிற மாநிலங்கள்
Typography

ஜெய்ப்பூர், பிப்.15- நகரின் தூய்மையைப் பேணி காக்க வேண்டிய அமைச்சரே சாலையோரத்தில் காரை நிறுத்தி சுவரில் சிறுநீர் கழிக்கலாமா என்று அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் நெட்டிசன்கள்.

ராஜஸ்தானின் பிங்க் சிட்டி என வர்ணிக்கப்படுவது ஜெயப்பூர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்ட இந்த நகரில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் காளிச்சரண் சாரப் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது சாலையோரம் காரை நிறுத்தி விட்டு அருகே இருந்த கட்டடம் ஒன்றின் சுவரில் சிறுநீர் கழித்தார். 

இதனைப் பொதுமக்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டார். இதனால் இப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

தூய்மை திட்டத்தின் கீழ் இருக்கும் அமைச்சர் அதுவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் இப்படி இரு கேவலமான காரியத்தைச் செய்யலாமா என இப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

நகரில் இதுபோன்று அசிங்கம் செய்பவர்கள் மீது ரூ.200 அபராதம் விதிக்கப்படுவது வழக்கமானது. இது தொடர்பாக மாநகராட்சி, அமைச்சரிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியது. ஆனால் அமைச்சர் தரப்பில் சரியான பதில் வரவில்லை என்றும் ஆனால் விசயத்தைப் பெரிதாக்க வேண்டாம் என அமைச்சர் தரப்பு சமரசம் செய்ய முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS