தம்பியைக் காக்க சீறிப் பாய்ந்த மாட்டுடன் போராடிய  சிறுமி -  -(Video)

பிற மாநிலங்கள்
Typography

நவிலக்கோன், பிப் 16: காளையிடமிருந்து தனது தம்பியை எட்டு வயது சிறுமி துணிச்சலாகப் போராடி மீட்டுள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் ஹன்னவர் தாலுகாவிலுள்ள நவிலக்கோன் என்ற கிராமத்தில், எட்டு வயது சிறுமி தமது இரண்டு வயது தம்பியுடன் அவர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அந்த வழியாக சீறி வந்த மாடு ஒன்று, அவர்களை நோக்கிப் பாய்ந்து முட்டித் தாக்கியது.  இதில் அந்தச் சிறுமி தனது தம்பியை கடைசி வரை விடாமல் கையில் பிடித்துக் கொண்டு அந்த மாடுடன் இணையாகப் போராடிக் கொண்டிருந்தார்.

வீட்டின் உள்ளே இருந்த நபர் வெளியே ஓடி வந்து அந்த மாட்டை உடனடியாக விரட்டியடித்தார். ஆனால் அங்கிருந்து நகர்ந்த சிறிது நேரத்தில் சீறிப் பாய்ந்து தாக வந்த போது அங்கிருந்த ஒருவர் கம்பை கையிலெடுத்து விரட்டினார்.

இது தொடர்பான வீடியோ, சிசிடி காமாரவில் பதிவாகி தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.  பல்ரும் அந்தச் சிறுமியின் துணிச்சலான போராட்டத்தைப் பாராட்டியுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS