நடிகை ஶ்ரீதேவி இறப்பதற்கு முன் மது அருந்தியதே மரணத்திற்கு காரணமா?

பிற மாநிலங்கள்
Typography

மும்பை, பிப்.26- திடீர் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி இறப்பதற்கு முன்னர் மது அருந்தியிருந்தார் என அவரது ரத்தப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அவரின் மரணத்திற்கு அவர் குடிபோதையில் இருந்தது தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கணவர் மற்றும் தனது இரண்டாவது மகள் குஷியுடன் துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உயிரிழந்தார்.

அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை அறிக்கையில் நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு முன்பு மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டடுள்ளது. இதனால் மதுபோதையில் பாத் டப்பில் மூழ்கி அவர் உயிரிழந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS