ஶ்ரீதேவி உடல் இந்தியாவிற்கு எடுத்து வர தாமதம்; இது தான் காரணமா?

பிற மாநிலங்கள்
Typography

மும்பை, பிப்.27- நடிகை ஶ்ரீதேவி திடீர் மரணமடைந்து மூன்று நாட்கள் ஆகி விட்டாலும் அவரின் உடல் இன்னும் இந்தியாவிற்கு கொண்டு வரபடவில்லை. இதற்கு காரணம் அவரின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம் தான் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீதேவி என்பவர் துபாய் அரசை பொறுத்தளவில் ஒரு வெளிநாட்டு பிரஜையாகும். ஸ்ரீதேவி மரணம் திடீரென நிகழ்ந்துள்ளது. அதுவும் உடல் நோயால் பாதிக்கப்பட்டு அவர் இறக்கவில்லை. தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. அவரது உடலில் மது இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

எனவே இதை சாதாரண மரணமாக பார்க்க முடியாது என சந்தேகத்திற்கிடமான சாவு என்ற பிரிவில்தான் துபாயில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் முழு அளவிலான உடல்கூறு சோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. மேலோட்டமான முதல்கட்ட அறிக்கைதான் வெளியாகியுள்ளது. எனவே, நேற்று ஸ்ரீதேவி உடலை இந்தியா எடுத்துச் செல்ல துபாய் அரசு அனுமதி வழங்கவில்லை.

எனவே இன்று தான் ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு செல்ல துபாய் public prosecution துறை அனுமதி கொடுக்கும் என்று தெரிகிறது. இதனால் ஸ்ரீதேவிக்கு மும்பையில் இறுதி சடங்குகள் குறித்த நேரத்தில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS