ஶ்ரீதேவிக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி! அரசு மரியாதையுடன் இன்று தகனம்!

பிற மாநிலங்கள்
Typography

மும்பை, பிப்.28- மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் உடலுக்கு பொதுமக்களும் ரசிகர்களும் நீண்ட வரிசையில் நின்று இறுதி மரியாதை செலுத்தினர். அன்னாரின் உடல் இன்று மும்பையில் மகாராஷ்டிர அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் கடந்த வாரம் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். நேற்றைய தினம் எம்பாமிங் செய்யப்பட்டு இரவு அனில் அம்பானி அனுப்பிய தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள லோகன்ட்வாலாவில் உள்ள அவரது உடல் வந்தடைந்தது.

 

அந்தேரியில் உள்ள செலிபிரட்டிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முன்னதாக, நடிகர்கள் கமல்ஹாசனும் ரஜினியும் ஶ்ரீதேவி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேற்றே மும்பை சென்றனர். பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் பூக்களையும் படங்களையும் ஏந்திக் கொண்டு ஶ்ரீதேவி உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS