ஒரு  பொய்யான குறுந்தகவல்; ஒரு திருமணம் குளறுபடியானது!

பிற மாநிலங்கள்
Typography

திருவனந்தபுரம், ஏப். 11- கேரளாவில் நடக்க இருந்த திருமணம் ஒன்று பொய்யான வாட்ஸ் -ஆப் குறுந்தகவலால் நின்று போனது.  ஏர்ணா குளத்தைச் சேர்ந்து கல்லூரி மாணவி ஒருவருக்கு சில வாரங்களுக்கு முன் துபாயில் வேலை பார்க்கும் உறவுக்காரருடன் திருமணம் நடக்க விருந்தது.

இந்த நிலையில் அந்தப் பெண் வேறு ஒரு நபருடன் நட்பில் இருப்பதாகவும், இன்னும் இரண்டு தினங்களில்  காதலருடன் ஓடிப் போகவிருப்ப தாகவும்  குறுந்தகவல் ஒன்று வெளியானது.  இந்தச் செய்தி பரவலாக சுற்று வட்டாரத்தில் வைரலானது. இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. 

அந்த பெண்ணும் அவரின் நண்பரும் பேருந்து நிலையம் ஒன்றில் நிற்பது போல ஒரு புகைப்படம் ஒன்றும்- ஓர் ஆடியோவும் அந்த வாட்ஸ் -ஆப்பில் அனுப்பப்பட்டிருந்தன. ஓடிப் போகவிருக்கும் அவர்களை  கண்டுபிடித்து தண்டனை கொடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த குறுந்தகவல் அப்படியே எல்லோருக்கும் சென்றடைய பெண்  வீட்டிற்கும் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்தப் பெண் 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளித்தார். ஷிஹாப் என்கிற  நபர் ஒருவர், அதே பகுதியைச்   சேர்ந்தவர் இவ்வாறு செய்துள்ளார் என்று கண்டு பிடிக்கப்பட்டது. 

ஷிஹாப் தற்போது போலீசரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்தப் பெண்ணை தெரியவே தெரியாது என்றும்  கூறப்படுகிறது. இப்படி  அடிக்கடி விளையாட்டாக போட்டோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்புவேன் என்று அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS