'மன்னிப்பு கேட்பேன், அவரிடமல்ல'; விமான பணியாளரைச் செருப்பால் அடித்த எம்பி!

பிற மாநிலங்கள்
Typography

புதுடெல்லி, ஏப்ரல் 6 - விமானத்தில் பயணித்தப்போது பணியாளரை செருப்பால் அடித்ததற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க தயார், ஆனால் தான் அடித்த பணியாளரிடம் மட்டும் மன்னிப்பு கேட்க முடியாது என சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமான பணியாளரின் கண் கண்ணாடியை உடைத்து, சட்டையைக் கிழித்து 25 முறை செருப்பால் அடித்த விவகாரம் தொடர்பாக சிவசேனா கட்சியின் எம்பி ரவிந்திரா கெய்க்வாட் விமானத்தில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இத்தகாத செயலுக்காக இவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலர்  கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவை முற்றுகையிட்டு சிவசேனா எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

"அவர் எம்.பி.யாக இருந்தாலும் விமானத்தில் பயணிக்கும் போது அவர் பயணிதான். எனவே, விமான பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது" என்று அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறினார். 

தனது செயல் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக மக்களவையில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ரவீந்திர கெய்க்வாட் கூறினார். ஆனால், விமான நிறுவன அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் உறுதியாகக் கூறியுள்ளார். இவரின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS