எம்பி-க்கு எதிராக ஏர் இந்தியாவின் 'பிடிவாதம்'; டெல்லிக்கான டிக்கெட் ரத்து!

பிற மாநிலங்கள்
Typography

புதுடெல்லி, ஏப்ரல் 7 -  ஏர் இந்தியா விமான பணியாளரைச் செருப்பால் அடித்த விவகாரம் இரண்டு வாரங்களாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் சிவசேனா கட்சியின் எம்பிக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, எம்பி ரவீந்திர கெய்க்வாட் மக்களிடம் மன்னிப்பு கேட்பேனே தவிர சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று கூறியது பலரின் கண்டனத்திற்கு ஆளாகியது.

இதனை தொடர்ந்து , சிவசேனா கட்சியின் நாடாளமன்ற உறுப்பினர் ரவீந்திர கெயிக்வாட்க்கு விதிக்கப்பட்டுள்ள விமான தடை நீக்கப்பட்டதாகப் பல செய்திகள் வெளியாகின.  

ஆனால், விமானத்துறை அமைச்சுவிடமிருந்து தடையை நீக்குவது தொடர்பாக எந்தவொரு உத்தரவும் இதுவரை வரவில்லை என்று ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி விமான பாதுகாப்பையும் நன்னடத்தையும் பேணி காப்பதோடு விமான பணியாளரிடம்  மன்னிப்பு கோரி முறையான கடிதம் வெளியிடும் வரை ரவீந்திர கெயிக்வாட் மீதான தடை நீக்கப்படாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இவ்விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கும் ஏர் இந்தியா, டெல்லியிலிருந்து மும்பைக்கும் மும்பையிலிருந்து டெல்லிக்குச் செல்லும் கெயிக்வாட்டின் பயணத்திற்காக ஏப்ரல் 17 மற்றும் 24 தேதிகளில் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுக்குகளை அது ரத்து செய்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS