டில்லி: விரக்தியின் உச்சம்; நிர்வாணப் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்!

பிற மாநிலங்கள்
Typography

டில்லி, ஏப்ரல் 10- டில்லியில் நடந்து வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்தது. தங்களின் போராட்டத்திற்கு எந்த பலனும் கிடைக்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென பிரதமர் அலுவலகம் முன் நிர்வாணமாக சாலையில் ஓடினர். 

டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் பயிர் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 28 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை பலர் வந்து சந்தித்தாலும், பிரதமரிடம் அழைத்துச் செல்வதாக உறுதி சொல்லிருந்தாலும் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை.

இந்நிலையில், சாதகமான பதில் ஏதும் வராத நிலையில், விரக்தியின் உச்சத்திற்கே சென்ற சில விவசாயிகள் இன்று பிரதமர் அலுவலகம் முன் நிர்வாணப் போராட்டம் நடத்தினர். ஆடைகளைக் களைந்து சாலைகளில் உருண்டு போராட்டம் நடத்தியனர். அவர்களைப் போலீசார் கைதுச் செய்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS