ஜாகிர் நாயக்கிற்கு சிறப்பு நீதிமன்றம் கைதாணை!

பிற மாநிலங்கள்
Typography

மும்பை, ஏப்ரல் 14 - பண மோசடி வழக்கு தொடர்பாக சர்ச்சைக்குரிய சமய போதகரான ஜாகிர் நாயக் மீது மும்பையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அனுமதி இல்லாத கைதாணையைப் பிறப்பித்துள்ளது.

மும்பையின் அமலாக்க இயக்குனர் குழுமம் கடந்த டிசம்பர் மாதம், ஜாகிர் நாயக் மீது பண மோசடி வழக்கை பதிவு செய்தது. தீவிரவாத செயல்களுக்கு பண உதவி செய்ததற்கும் அறவாரியத்திற்கு வந்த நிதியில் முறைகேடு செய்ததற்கும் அவர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு தொடர்பாக அவருக்கு பல முறை அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன. இருப்பினும் அவர் ஒருமுறைக் கூட விசாரணைக்கு வரவில்லை என மத்திய ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜாகிர் நாயக் மீது ஜாமீன் அனுமதி இல்லாத கைதாணைப் பிறப்பித்தது. 

கடந்த வருடம் டாக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுப்பட்டவர்கள் 51 வயதான ஜாகிர் நாயக்கின் மத பிரச்சாரத்தில் ஈர்க்கப்பட்டதால் இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக கூறினர். இதனால், நாயக்கின் அமைப்பு மீது தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS