பதினொரு வயது மாணவன் சாதனை! 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி!

பிற மாநிலங்கள்
Typography

ஐதராபாத், ஏப்ரல்.17- பதினொரு சிறுவன், 12ஆம் வகுப்புக்கான தேர்வில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளான். தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஐதராபாத்தில் புனித மேரி ஜூனியர் கல்லூரியில் அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற 11 வயது சிறுவன் படித்து வருகிறான்.

மிக இளமையிலே படிப்பாற்றலில் சிறந்து விளங்கிவரும் அகஸ்தியா, கடந்த மார்ச் மாதத்தில் 12ஆம் வகுப்புக்கான தேர்வில் அமர அனுமதிக்கப்பட்டான். இந்தத் தேர்வின் முடிவுகள் கடந்த ஞாயிறன்று வெளிவந்தது. அதில் 63 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்று வெற்றி அடைந்துள்ளான்.

தெலுங்கானா மாநிலத்திலேயே மிகக் குறைந்த வயதில் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவன் என்ற பெருமையை அகஸ்தியா பெற்றுள்ளான்.

வருங்காலத்தில் அகஸ்தியா ஒரு மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகிறான் என்று அவனது தந்தை அஸ்வனி குமார் கூறியுள்ளார். மேலும், அகஸ்தியா தனது 9 ஆவது வயதிலேயே 10ஆம் வகுப்பு தேர்வை எழுதி வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS