சர்ச்சை கருத்து: பாபா ராம்தேவுக்கு ஜாமின் இல்லாத கைதாணை

பிற மாநிலங்கள்
Typography

ரோதக், ஜூன் 15- 'பாரத் மாதா கீ ஜே' எனும் கோஷம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய பாபா ராம்தேவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத கைது ஆணையைப் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசியபோது பாரத் மாதா கீ ஜே எனும் கோஷத்தை எழுப்ப மறுப்பவர்களின் தலையைத் துண்டிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை அவர் பேசியிருந்தார். அது தொடர்பாக, முன்னாள் உள்துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சுபாஷ் பத்ரா அரியானா மாநிலத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வரும்படி, நேரில் ஆஜாராக வேண்டும் என்று கடந்த மே 12ம் தேதி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனாலும் பாபா ராம்தேவ் ஆஜராகவில்லை. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சம்மன் அனுப்பியும் நீதிமன்றம் வராத பாபா ராம்தேவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத கைதாணையை பிறப்பிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.   

BLOG COMMENTS POWERED BY DISQUS