பெட்ரோல், டீசல்: இன்று முதல் தினமும் புதிய விலை! டில்லி அறிவிப்பு

பிற மாநிலங்கள்
Typography

புதுடில்லி, ஜூன் 16 - இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இனிமேல் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கும் முறை இன்று முதல் அமுல்படுத்தப் படுவதாக இந்திய எண்ணெய் கழகம் அறிவித்துள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில், விலை மாற்றி அமைக்கப்படுகிறது. எனவே விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வந்தன.

இந்த சூழ்நிலையில், நாள்தோறும் விலையை மாற்றி அமைக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக, இந்திய எண்ணெய் கழகம் அறிவித்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பை நேற்று வெளியிட்டன. 

இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.20–ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24–ம் குறைந்துள்ளன. இதன்படி சென்னையில் ரூ.69.93 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.68.02 ஆக குறைந்தது. டீசல் விலை ரூ.59.22–ல் இருந்து ரூ.57.41 ஆக குறைந்தது.

இந்த விலை இன்று காலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணிவரை நீடிக்கும். அதன்பிறகு, புதிய விலை அறிவிக்கப்படும்.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல் டீசல் விலையும் குறையும் என இந்திய எண்ணெய் கழகம் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS