ஹைதராபாத், ஜூலை.4- நான்கு வயது சிறுத்தை ஒன்று மின்சார கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

தெலுங்கானா மாநிலம் மல்லாரம் கிராமத்தில் மின்கம்பத்தில் தொங்கிய படி இறந்து கிடந்த சிறுத்தையைப் பார்த்த பொது மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் சிறுத்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, சிறுத்தை மின் கம்பத்தில் ஏறியதால் தான் மின்சாரம் தாக்கி  இறந்துள்ளது எனவும் ஆனால் ஏறியதற்கான காரணத்தை தெளிவாக கண்டறிய முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சிறுத்தையிடம் மரம் ஏறி தனக்கான உணவை நோட்டம் விடும் பழக்கம் உள்ளதாகவும் அதுபோல மின் கம்பத்ததில் ஏறி இருக்கலாம் எனவும் கூறினர்.

சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறும்போது, சிறுத்தை வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை எனவும் மின் கம்பத்தை தவறுதலாக சிறுத்தை கடித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர். 

ஜெய்ப்பூர், ஜூலை.3- ராஜஸ்தானில் உள்ள டோல்பூர் என்ற கிராமத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணியவும் கைப்பேசி பயன்படுத்தவும் தடை விதித்து ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்தில் முடிவெடுத்துள்ளனர். இது தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

பெண்கள் அணியும் இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உடைகள் ஆண்களை ஈர்ப்பதாகவும் அதனால் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டி இனி கிராமத்து பெண்கள் ஜீன்ஸ் அணிய பஞ்சாயத்து தலைவர்கள் தடை விதித்துள்ளனர்.

முன்னதாக, கஷ்வாஷ் இனத்தைச் சேர்ந்த 2000 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் மதுப்பழக்கத்தை ஒழிப்பதற்காகவும் தீர்மானம் போடப்பட்டுள்ளது. கிராமத்தில் யாரேனும் மது அருந்தினால் ரூ.1,100 அபராதமும் மது அருந்துவோர் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால் அவர்களுக்கு ரூ.500 சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடையிலும் புகையிலைப் பொருட்கள் விற்பனைச் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மதுக்கும் புகைக்கும் தடை விதித்தது சரி.. ஆனால்.. பெண்களின் உரிமையான ஆடை விசயத்தில் ஏன் கை வைத்தீர்கள் என்று இவர்களுக்கு எதிராக கருத்துகள் வெளிவர துவங்கியுள்ளன.

டெல்லி, ஜூலை.3- ஏர் இந்தியா விமானத்தில் குளிர்சாதனம் சரியாக இயங்காததால் சுவாசிக்க முடியாமல் பயணிகள் கடும் அவஸ்தைக்கு ஆளாகினர். சம்பவம் தொடர்பில் ஏர் இந்தியா ஊழியர்கள் ஒன்றும் தெரியாதது போல் நடந்து கொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேற்கு வங்கத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லி நோக்கி நேற்று புறப்பட்டது. அதில் 168 பயணிகள் பயணித்தனர். விமானம் புறப்படுவதற்கு முன்னமே குளிர்சாதனம் சரியாக இயங்காதது குறித்து பயணிகள் பணிப்பெண்களிடம் கூறியுள்ளனர். 

   ### காணொளி: நன்றி ETV Andhra Pradesh 

இருப்பினும், சற்று நேரத்தில் அது சரியாகிவிடும் என்று பணிப்பெண்கள் கூறியுள்ளனர். ஆனாலும், ஏசி சரி செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டனர். சில பயணிகளுக்கு பிராணவாயு கருவிகளும் பொருத்தப்பட்டன. 

விமானத்தில் உள்ளே வெப்பத்தினால் வியர்வை சொட்ட சொட்ட பயணித்த பயணிகள் ஒரு கட்டத்தில் இருக்கையில் இருந்த நாளிதழ்களைக் கொண்டு விசிறியபடியே பயணம் செய்தனர். இதனை பயணி ஒருவர் காணொளியாக எடுத்து ஊடகத்தில் வெளியிட்டார். 

ஐதராபாத், ஜூன் 23- தெலுங்கானாவில் 2 வயது குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.அக்குழந்தையை உயிருடன் மீட்க, மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.

தெலுங்கானாவில் உள்ள ரெங்காரெட்டி என்ற இடத்தில் குடி தண்ணிர் இல்லாமல் வறட்சி நிலவுகிறது. அங்கு பெரும்பாலும் 100 அடி வரைக்கும் சிறிய அளவிலான ஒரு துளை இட்டு, அதன் மூலம் குழாய் வழியாக தண்ணிரை வெளியே எடுத்து குடிநீராக பயன்படுத்துவது வழக்கம்.

அப்படி அமைக்கப்பட்ட 60 அடி ஆழ்துளை கிணறு ஒன்று பயன்படுத்தாத நிலையில், மூடப்படாமல் இருந்தது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை, அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் குழந்தையை உயருடன் மீட்க போராடி வருகின்றனர். 

இதுபோல ஒரு சம்பவம் கடந்த ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் லக்னோவிலும் நடந்துள்ளது. அதில் 110 அடி ஆள்துளை கிணற்றில் கவுஷி என்ற 1 வயது குழந்தை தவறி விழுந்தார். சம்பவம் அறித்த மீட்பு படையினர் குழந்தையை போராடி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அக்குழுந்தை மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இதில், குழந்தை பலிக்கு காரணமான ஆள்துளை கிணற்றின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 புதுச்சேரி, ஜூன்.21 - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் காரில் தேசியக்கொடி தலைகீழாக பறந்த விவகாரம் தொடர்பாக அவரது கார் ஓட்டுனர்  பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

புதுச்சேரி முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வந்திருந்தார். அவரது காரைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், அரசு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் வாகனங்களும் பின் தொடர்ந்து வந்தன.

 பின்னர் காரில் இருந்து இறங்கிய நாராயணசாமி அங்கிருந்த புறப்பட்டுவிட்டார். அப்போது அவரின் காரின் முன் பக்கத்தில் தேசியக் கொடி தலைகீழாகப் பறந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

சிலர் இக்காட்சியை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களுக்கு அனுப்பினர். பின் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கார் ஓட்டுனரான தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். 

லடாக், ஜூன் 21- உலக யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவிலேயே அதிக உயரமான ராணுவ முகாம் லடாக்கில் இந்திய இராணுவ வீரர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். அவர்கள் யோகா செய்யும் படங்களை டிவிட்டர் பக்கத்தில் இந்தியர்கள் அதிகமாக பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்று உலக அளவில் யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சாதாரண வேலை செய்பவர்கள் உட்பட நிறுவனங்களின் முதலாளிகள் உட்பட அனைவரும் இன்றைய நாளில் தங்களால் முடிந்த அளவு யோகா செய்கின்றனர். 

ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக போராடும் இராணுவ வீரர்களும் யோகா செய்வதைக் கண்டால்? அதிலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தின் உயரமான இராணுவ முகாமான லடாக்கில் உள்ள இராணுவ வீரர்கள் யோகா செய்தால்... பார்ப்போரைக் கவரும் இந்த படங்கள் தான் இன்று இணையத்தில் அதிகம் பகிரப்படும் படமாகும்.

மும்பை, ஜூன் 20- ஆறு வருடங்களாக காதலித்த பெண் தன்னை வேண்டாம் என்று கூறிவிட்டதால் தற்கொலை செய்து கொள்ள நினைத்த ஆடவன் அதனைக் காதலிக்கே நேரலை செய்த சம்பவம் இங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை அருகே உல்ஹாஸ் நகரை சேர்ந்த அஷ்வனி என்ற 26 வயது ஆடவன் ஆறு ஆண்டுகளாக பெண் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இருப்பினும், காதலியுடன் மீண்டும் உறவை ஏற்படுத்திக் கொள்ள கடந்த மாதம் அவரைச் சந்தித்துள்ளார். ஆனால், பிடிவாதமாக இருந்த காதலியினால் மன உளைச்சலுக்கு ஆளாகிய அஷ்வனி, வீடு திரும்பியவுடன் தற்கொலை செய்துக் கொண்டான். 

சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிய பிறகு, விசாரணையின் போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தற்கொலை செய்தபோது அவ்வாடவன் தனது காதலிக்கு நேரலையில் பேசி விட்டு பின்னர் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது. 

இதனால், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அஷ்வனியின் காதலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், அப்பெண்ணை கைது செய்யாமல் போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

புதுடில்லி, ஜூன் 16 - இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இனிமேல் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கும் முறை இன்று முதல் அமுல்படுத்தப் படுவதாக இந்திய எண்ணெய் கழகம் அறிவித்துள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில், விலை மாற்றி அமைக்கப்படுகிறது. எனவே விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வந்தன.

இந்த சூழ்நிலையில், நாள்தோறும் விலையை மாற்றி அமைக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக, இந்திய எண்ணெய் கழகம் அறிவித்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பை நேற்று வெளியிட்டன. 

இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.20–ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24–ம் குறைந்துள்ளன. இதன்படி சென்னையில் ரூ.69.93 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.68.02 ஆக குறைந்தது. டீசல் விலை ரூ.59.22–ல் இருந்து ரூ.57.41 ஆக குறைந்தது.

இந்த விலை இன்று காலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணிவரை நீடிக்கும். அதன்பிறகு, புதிய விலை அறிவிக்கப்படும்.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல் டீசல் விலையும் குறையும் என இந்திய எண்ணெய் கழகம் தெரிவித்துள்ளது.

ரோதக், ஜூன் 15- 'பாரத் மாதா கீ ஜே' எனும் கோஷம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய பாபா ராம்தேவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத கைது ஆணையைப் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசியபோது பாரத் மாதா கீ ஜே எனும் கோஷத்தை எழுப்ப மறுப்பவர்களின் தலையைத் துண்டிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை அவர் பேசியிருந்தார். அது தொடர்பாக, முன்னாள் உள்துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சுபாஷ் பத்ரா அரியானா மாநிலத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வரும்படி, நேரில் ஆஜாராக வேண்டும் என்று கடந்த மே 12ம் தேதி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனாலும் பாபா ராம்தேவ் ஆஜராகவில்லை. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சம்மன் அனுப்பியும் நீதிமன்றம் வராத பாபா ராம்தேவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத கைதாணையை பிறப்பிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.   

புதுடில்லி, ஜூன் 14 - பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது இந்தியாவில் வழக்கு இருப்பதால் அவரை நாடுகடத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரித்த லண்டன் நிதிமன்றம் மல்லையாக்கு ஜாமீன் வழங்கியது.

விஜய் மல்லையா ஸ்டேட் பேங் ஆப் இந்தியா உள்ளிட்ட பல வங்கிகளில் இருந்து பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தாததால் அவர் மீது இந்தியாவில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் இந்தியாவில் இருந்து தப்பி, லண்டன் சென்றுவிட்டார். 

பின்னர் அவரை கைது செய்து இந்தியா கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. அதே நேரத்தில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கைகளை பிரிட்டன் அதிகாரிகளும் மேற்கொண்டனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  விஜய் மல்லையாவுக்கு வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டும் உத்தரவிட்டது.

 

டில்லி, ஜூன் 9 – இந்தியாவின் அதிபர் தேர்தல் வரும் ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ளது . இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சுமித்ரா மகாஜன், ஜார்கண்ட் ஆளுநர் திரெளபதி முர்மு ஆகிய இருவரையும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பெயரும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடதக்கது .

இந்நிலையில் பெண் வேட்பாளரை நிறுத்துவதில் கட்சிக்குள் ஒருமித்த கருத்து நிலவுகிறது. அதன் மூலம் பெண்களுக்கான அங்கீகாரத்தை கட்சி வழங்குவதாகவும் முன்னிறுத்தி கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

எதுவாயினும் வரும் 15ம் தேதி கட்சியின் தலைவர் அமித்ஷா  அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை அறிவிக்க உள்ளார். எதிர்கட்சிகளை பொருத்தவரை  பொது வேட்பாளரை நிறுத்தி பாரதிய ஜனதாவை எதிர்கொள்ள தயாராகி வருகிறன.

More Articles ...