அதிபர் தேர்தல்: இரு நாளில் பாஜக. வேட்பாளர் அறிவிப்பு!

India
Typography

 புதுடில்லி, ஜூன்19- புதிய அதிபருக்கான தேர்தலில், பா.ஜ.க. சார்பில், போட்டியிடும் வேட்பாளரை இன்னும் இரு நாட்களுக்குள் அறிவிக்கப்பட உள்ளதாக கட்சி தலைமை அறிவித்திருக்கிறது. 

இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம், வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம், 17-இல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் துவங்கிவிட்டது.

மத்தியில் ஆளும் பா.ஜக. தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, அதிபரைப் போட்டியின்றி தேர்வு செய்ய விரும்புகிறது. இதற்காக, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு ஆகியோர் அடங்கிய குழுவை, பா.ஜ.க. மேலிடம் அமைத்துள்ளது. இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் நபர் யார் என வரும் 21ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், பா.ஜக.வை எதிர்த்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த போவதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS