மருத்துவமனையில் 'இறந்த' குழந்தை  இடுகாட்டில் கையசைத்தது எப்படி?

India
Typography

புதுடில்லி, ஜூன்.19– டில்லி அரசு மருத்துவனையில் பிறந்த குழந்தை இறந்து விட்டதாக கூறி, மருத்துவர்கள், சவ அடக்கத்திற்காக சிசுக்களை வைக்கும் பெட்டிக்குள் வைத்து பெற்றொர்களிடம் கொடுத்து விட்ட நிலையில், சவ அடக்கம் செய்யும் இடத்தில் திறந்து பெட்டியைத் திறந்துப் பார்த்த போது உள்ளே குழந்தையின் கை, கால்கள் அசைந்ததால் அதிர்ச்சி பெற்றோர்கள் அடைந்தனர்.

புதுடில்லியைச் சேர்ந்த சாந்திதேவி (வயது 28) என்ற குடும்பமாது கர்ப்பமாக இருந்தார். திடிரென பிரசவ வலி ஏற்படவே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சில நிமிடங்களில் அவருக்குக் குழந்தை பிறந்தது. இக்குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையின் எடையும் (460 கிராம்) குறைவாக இருந்தது எனவும் பிறகு அக்குழந்தை இறந்துவிட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். 

பின்னர் இறந்த குழந்தையை மருத்துவமனை வழக்கப்படி ஒரு பெட்டியில் வைத்து செய்து பெற்றோர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள்.

இறந்த குழந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்தனர். அடக்கம் செய்யும் தருணத்தில் குழந்தையை இருந்த பெட்டியைத் திறந்து பார்த்த போது குழந்தை கை, கால்களை அசைப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக அதே மருத்துவமனைக்கு கொன்டு சென்று தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை எடை குறைவுடன் பிறந்திருப்பதால் முடிந்தவரை சிகிச்சை அளித்து குழந்தையைக் காப்பாற்ற நாங்கள் போராடி வருகிறோம் என்று டாக்டர்கள் கூறினர்.

எனினும், உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக கூறி அனுப்பியது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு மருத்துவமனை உத்தரவிட்டுள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS