ஆட்டை விழுங்கிவிட்டு அகப்பட்ட மலைப்பாம்பு! (VIDEO)

India
Typography

 கவுஹத்தி, ஜூன்.19- தன்னை விட பெரிசான விஷயங்களை விழுங்கவேண்டும் என்று ஆசைப்படுகின்ற ஜீவன்கள் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மலைப்பம்புதான். அசாம் மாநிலத்தில் ஓர் ஆட்டையே விழுங்கி விட்து அவஸ்தைப்பட்டது இந்த மலைப்பாம்பு...!

 ## வீடியோ: Caters Clips 

பைஹதா சரியலி என்ற சிற்றூறுக்கு அருகிலிருந்த காட்டை விட்டு வெளியே உணவுக்கு அலைந்த ஈந்த மலைப்பாம்பு, இறுதியில் இந்த சிற்றூருக்குள் புகுந்தது. அங்கு ஒரு வீட்டின் கொல்லைப் புறத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில், தனக்குப் பிடித்த மாதிரி ஓர் ஆட்டை அப்படியே வளைத்துப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்து விட்டு வந்த வழியே திரும்பிப் போய்விடலாம் என்று அது நினைத்தது.

ஆனால், முடியவில்லை.., தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு வயிற்றுக்குள இருந்த ஆட்டுடன் அதிக தூரம் நகர முடியாமல் திணறியது அதற்குளளூர் மக்கள் பார்த்துவிட்டார்கள். அதன் கழுத்தில் ஒரு கயிற்றைப் போட்டுக் கட்டிவைத்த பின்னர் வனவிலங்குத் துறை அழைப்பு விடுத்தனர்.

அங்கு விரைந்த வனவிலங்குத் துறையினர், பாம்புக்கு துன்புறுத்தக்கூடாது என்று மக்களை எச்சரித்தோடு இறுதியில் அந்த மலைப்பாம்பை மீண்டும் காட்டுப் பகுதிக்குள் கொண்டு போய் விடுவதற்காக கொண்டு சென்று விட்டனர். எப்படியோ, அந்தப் பாம்பின் இந்த வேட்டை இலாபத்தில் முடிந்தது ஆனால், ஆட்டுக்கு சொந்தக்காரருக்கு நஷ்டக் கணக்குத்தான்..,

BLOG COMMENTS POWERED BY DISQUS