உலகம்

118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்! நிகழ்ந்தது அதிசயம்!

 

சாவ் லூயிஸ்,, மார்ச் 22 –  பிரேசிலில் 7 மாத குழந்தையை  118 அடி உயர பாலத்தில் இருந்து  ஒரு தாய் தூக்கி வீசிய கொடூரச் சம்பவம்  நடந்துள்ளது. எனினும் அதிசயிக்கும்  வகையில் அந்தக் குழந்தை உயிர் தப்பியுள்ளது.

சாவ் லூயிஸ் என்ற இடத்தில்   அமைந்துள்ள  ஜொஸ் சார்னி என்றழைக்கப்படும் பாலத்தில்   இந்தச் சம்பவம் நடந்தது.

பாலத்தின் மேலே நின்று கொண்டிருந்த தாய், தனது 7 மாத குழந்தையைத்   கீழே தூக்கி வீச முயன்றுள்ளனர்.   இவர் குழந்தையை  வீச முற்படும் போது, கீழே நின்று கொண்டிருந்தவர்கள் சத்தம் போட்டு அலறியுள்ளனர்.

ஆனால்,  இதனை பொருட்படுத்தாமல் அப்பெண் குழந்தையை வீசியுள்ளார்.  ஆனால் பாலத்திற்கு கீழே இருந்த மணல் பகுதி தண்ணீரால் சூழப்பட்டு களிமண் போன்று இருந்ததால் கீழே விழுந்த குழந்தை லேசான காயத்துடன் அப்படியே களிமண்ணில் குத்தாக நின்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து குழந்தையை மீட்ட போலீசார்  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  தாய் கர்லா ரெஜினா மென்டெஸ் (வயது  23)  போலீசார் நடத்திய விசாரணையில், தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் குழந்தையை கொல்ல முயன்றதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொலைமுயற்சி வழக்கில் அப்பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் அப்பெண், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் அப்பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker