இந்தியா

மலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்!

Story Highlights

  • Knowledge is power
  • The Future Of Possible
  • Hibs and Ross County fans on final
  • Tip of the day: That man again
  • Hibs and Ross County fans on final
  • Spieth in danger of missing cut

பாட்னா, மார்ச் 22- இந்தியாவில் பாம்பாட்டி ஒருவரை மலைப்பாம்பு ஒன்று கழுத்தை இறுக்கியதால் அவர் உயிருக்குப் போராடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின்  மவ் பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் பாம்பாட்டி ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் மலைப்பாம்பை வைத்து சாகசம் காட்டி வந்தார்.

அப்போது பாம்பை தன் கழுத்தில் போட்டுக் கொண்டு, அங்கிருந்த மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் எதிர்பாரதவிதமாக பாம்பானது அவரின் கழுத்தைத் தன்னுடைய உடலைக் கொண்டு இறுக்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பாம்பிடமிருந்து மீள்வதற்காகப் போராடிய போது, அது விடாத காரணத்தினால்  கீழே விழுந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு துடி துடித்தார்.

அங்கிருந்த மக்களோ, இது நடிப்பு என்று நினைத்து வீடியோ எடுத்தனர். வெகுநேரமாகியும் பாம்பாட்டி எழாததால்  இரண்டு பேர் வந்து அவரை எழுப்ப முயன்ற போது தான்,  பாம்பு நன்றாக அவருடைய கழுத்தை இறுக்கி இருந்தது தெரியவந்தது

அதன் பின் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கிருக்கும் மருத்துவர்கள் இங்கு சிகிச்சையளிக்க முடியாது என்று வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்து வருகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker