உலகம்

அமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்!

அன்னாபோலிஸ், மார்ச். 23-  அமெரிக்காவின் மேரிலேண்ட்  மாநில ஆளுநர் தேர்தலில் இலங்கை வம்சாவளி தமிழ்ப்பெண் இம்முறை போட்டியிடு கிறார்.

கிரிஷாந்தி விக்னராஜா என்ற இந்த இலங்கை வம்சாவளி பெண் ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின் கொள்கைப் பிரிவு  இயக்குனராகப்  பணியாற்றினார்.

இவர் யார்ல் பல்கலைக் கழகத்தில் கலை மற்றும் சட்டத் துறையிலும் பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையிலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர்.

கிரிஷாந்தி விக்னராஜா இலங்கையில் இருந்து 9 மாத குழந்தையாக அமெரிக்காவில் தமது பெற்றோருடன்  குடியேறினார். இந்த நிலையில், அமெரிக்காவின் மேரிலேண்ட் ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி  வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

“நான் ஒரு தாய், ஒரு பெண், நான் உங்களின் அடுத்த ஆளுநராக வரவேண்டும்’ என்று தமது பிரசாரத்தின் போது அவர் குறிப்பிட்டார். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker