மலேசியா

போலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்!

Story Highlights

  • Knowledge is power
  • The Future Of Possible
  • Hibs and Ross County fans on final
  • Tip of the day: That man again
  • Hibs and Ross County fans on final
  • Spieth in danger of missing cut

கோலாலம்பூர், மார்ச் 23 – போலீஸ்காரர் ஒருவருக்கு பாலியல் சேவை வழங்க முன் வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 21 வயது இளம் பெண்ணுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 1,300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராதத் தொகையை அவர் செலுத்தத் தவறினால், இரண்டு மாதச் சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் என உத்தர விடப்பட்டது.

விபச்சார நோக்கத்தோடு, கே.தியாகராஜன் என்ற போலீஸ்காரரை அணுகி, 60 ரிங்கிட்டிற்கு தான் பாலியல் சேவை வழங்குவதாக கூறியதாக  சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்தப் பெண் மாஜிஸ்திரேட் நூர் பாத்தின் நடிரா முன்னிலையில் ஒப்புக் கொண்டார்.

டாங் வாங்கி, ஜாலான் பெட்டாலிங்கிலுள்ள தங்கும் விடுதிக்கு ஒன்றுக்கு முன்புறம் இச்சம்பவம் நடந்தது.

இந்தப் பெண் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாலும், இதுவே அவர் செய்த முதல் குற்றம் என்பதாலும் குறைந்தபட்ச தண்டனை திக்குமாறு அவருடைய வழக்கறிஞர் முகம்மட் அரிப் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

குடும்பப் பிரச்சனை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டு விட்டு வேலையில்லாமல் தவிக்கும் நிலையில் அவர் இருப்பதாக நீதிமன்றத்தில் அவர் சொன்னார்.

 

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker