இந்தியா

கார்த்தி சிதம்பரத்தை ஜாமினில் விடுவித்தது டில்லி நீதிமன்றம்!

புதுடில்லி, மார்ச் 23 – ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன்  கார்த்தி சிதம்பரத்துக்கு டில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி நடத்திய ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு முறைகேட்டில் தொடர்பிருக்கிறது என கூறி கடந்த மாதம் சிபிஐ-யால் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் சிபிஐ தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே தமக்கு ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி கார்க் ,  நிபந்தனைகளுடன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker