மலேசியா

கணினியில் 900 சிறார் ஆபாசப் படங்கள்: மலேசியர் ஆஸி.யில் கைது!

கோலாலம்பூர், மார்ச் 26- சுமார் 900  சிறார் ஆபாசப் படங்களையும், வீடியோக்களையும் நாட்டுக்குள் கடத்த முயன்றததாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்தில் 27 வயதுடைய மலேசியர் கைது செய்யப்பட்டார்.

அந்த நபரை சோதனையிட்ட போது அவருடைய மடிக் கணினி மற்றும் கைத்தொலைபேசிகளில் சிறார்களின் ஆபாசப்படங்களும் வீடியோக்களும் இருந்ததை ஆஸ்திரேலியபோலீசார் கண்டுபிடித்தனர்.

கோலாலம்பூரில் இருந்து மார்ச் 22 ஆம் தேதி இந்த மலேசியர், விமான மூலமாக மெல்போர்ன் விமான நிலையத்தை வந்த போது சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார். இந்த நபர் மீது நீதிமன்றத்தில் உடனடியாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

சிறார்களின் ஆபாசப்படங்களை நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்பவர்கள் அல்லது உள்ளே கொண்டு வருபவர்களுக்கு கூடுதல் பட்சமாக 1 லட்சத்து 80 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker