மலேசியா

ஓடிக் கொண்டிருந்த நிசான் கார் வெடித்தது! தீயில் காரோட்டி பலி!

ஜித்ரா, மார்ச். 27– வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 6 ஆவது கிலோமீட்டரில் தன்னுடைய நிசான் காரை ஓட்டிக் கொண்டிருந்த ஒருவர்,  திடிரென அந்தக் கார் வெடித்து, தீப்பற்றிக் கொண்டதால், அதிலிருந்து தப்பிக்க வழியின்றி கருகி மாண்ட துயரச் சம்பவம் இங்கு நடந்தது.

காலை 10 மணியளவில் புக்கிட் காயு ஜித்ராவிற்கு அருகில், ஓடிக் கொண்டிருந் போது கார்  வெடித்ததால், அதனைக் கட்டுப்படுத்த முடியாமல், அது சாலைத் தடுப்பில் போய் மோதி, விறுவிறுவென தீ பரவியது.

அந்தக் காருக்குள் இருந்து வெளியேற வர முடியாமல், காரோட்டி உள்ளேயே சிக்கி உயிரிழக்க நேர்ந்தது. அவர் முற்றாகத்  தீயில் எரிந்து விட்டதாக குபாங் பாசு போலீஸ் படைத் தலைவர் முகம்மட் இஸ்மாயில் தெரிவித்தார்.  சுமார் 15 நிமிட இடைவெளியில் இந்த இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த காரின் தீயை அணைத்தனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker