மலேசியா

பொய்ச் செய்தி தடுப்பு மசோதாவை நிராகரிக்க எம்.பி.களுக்கு கோரிக்கை!

கோலாலம்பூர், மார்ச் 27- பொய்ச் செய்திகள் தடுப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என்று சி-4 எனப்படும் ஊழலுக்கு எதிரான அரசு சாரா இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

டிஜிட்டல் யுகத்தில் நல்லாட்சி மற்றும் தகவல் பரிமாற்றத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மலேசியா, மிக ஆழமாக சர்வாதிகாரத்திற்குள் புதைந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என்று சி-4 இயக்கத்தின் நிர்வாக இயக்குனராக சிந்தியா கேட்ரியல் குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கு தகவல்கள் தாராளமாக கிடைக்கும் வழிமுறையே,  ஊழலையும் அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் தடுப்பதற்கான வடிவம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

பொய்ச் செய்திகளில் இருந்து மக்களைக் காக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசாங்கம் நாடளுமன்றத்தில் கூறினாலும், பொதுத் தேர்தல் தருணத்தில் தனது எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கு இந்தச் சட்டத்தை அரசு ஓர் ஆயுதமாக பயன்படுத்தும் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker