மலேசியா

மஇகா வேட்பாளர் பட்டியல்: இரகசியம் காக்கிறார் சுப்ரா

கோலாலம்பூர், மார்ச் 27 –  அடுத்து வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் மஇகா வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை  மஇகா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் மிக இரகசியமாக  பாதுகாத்து வருகிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பட்டியலில் கடைசி நேரம் வரை மாற்றங்கள் இருக்கலாம் என்பதால் அவர் இரகசியம் காக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் என்று தெரிகிறது.

வேட்பாளர்கள் யார் யார் எனக் கட்சி அடையாளம் கண்டுவிட்டது. தேசிய முன்னணியின் தலைமைத்துவத்துடன் தற்போது இது குறித்து விவாதிக்கப்பட்டு  வருகிறது என்று டத்தோ ஶ்ரீ சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

அதே வேளையில், மஇகா சில தொகுதிகளை பங்காளிக் கட்சிகளுடன் மாற்றம் செய்து கொள்வது அல்லது தொடர்ந்து பழைய தொகுதிகளையே நிலை நிறுத்துவது குறித்த விஷயங்களும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

மஇகா போட்டியிடும்  9 நாடாளுமன்றத் தொகுதிகள், 19 சட்ட மன்றத் தொகுதிகள் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களில் 50 முதல் 60 விழுக்காடு வரை புதுமுகங்கள் இடம் பெறுவர் என்று அவர் சொன்னார்.

இந்த வேட்பாளர்கள் தகுதி உள்ளவர்களாக , அனைவரும் விரும்பக் கூடியவர்களாக அதே வேளையில் ஜெயிக்கக் கூடியவர்களாகவும் இருப்பர் என்றார் அவர்.

தங்களின் வட்டாரங்களில் ஓரளவுக்கு பிரபலமாக இருக்கும் கட்சித் தலைவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். அதே வேளையில் முன்னாள்  மஇகா தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேல் தரப்பிலிருந்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்யவும் முயற்சிகளை தாம் மேற் கொண்டு இருப்பதாக டத்தோ ஶ்ரீ சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker