மலேசியா

மாட் ரெம்பிட் – 2 இளம் பெண்களின் அதிர்ச்சி தரும் ‘திகில்’ சாகசம்! -(VIDEO)

கோலாலம்பூர், மார்ச்.27- ‘மாட் ரெம்பிட்’ எனப்படும் சாலையில் அசுர வேக மோட்டார் சைக்கிளோட்டிகள் பெரும்பாலோர் இளவயது பையன்களாகத் தான் இருப்பர் என்ற எண்ணத்தை சிதறடித்து இருக்கிறார்கள் இரு இளம் பெண்கள்.

சுமார் 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி மலேசியர்கள் மத்தியில் திகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இரண்டு இளம் பெண்கள் சாலையில் அசுர வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சாகாசம் புரியும் காட்சியைக் கொண்ட இந்த வீடியோ பரபரப்பாக இப்போது பரவி வருகிறது.

பட்டப்பகலில், சாலையைப் பயன்படுத்தும் இதர வாகனமோட்டிகளைப் பற்றி  கொஞ்சமும் கவலைப்படாமல் இந்தப் பெண்கள் சாகசம் புரிகின்றனர். இது எந்த இடத்தில் நடந்தது  என்பதை தெளிவாகக்  கண்டறிய முடியவில்லை. இந்த காட்சி வாட்ஸ்சாப்பில் அதிக அளவில் பரவியுள்ளது.

சிலர் இந்தப் பெண்களைப் பற்றி வலைத்தளங்களில் தாறுமாறாக வசை பொழிந்துள்ளனர். ஆனால், அதேவேளையில் சிலர் இப்படி மூர்க்கமான துணிச்சலுடன் இளசுகள் நடந்து கொள்வது வழக்கமானது தான் என்று கூறியுள்ளனர்.

இவர்கள் பின்னாளில் ஓரளவுக்கு முதிர்ச்சியுற்று குடும்பம், பிள்ளைகள் என்றெல்லாம் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்று சிலர் சமாதானம் கூறியுள்ளனர். இதனிடையே ‘மாட் ரெம்பிட்’ எனப்படும் சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயம் விடுவோரை கட்டுப்படுத்து வதற்கான வழிகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker