மலேசியா

தொகுதிகள் சீரமைப்பு மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

கோலாலம்பூர்,மார்ச் 28 – தொகுதிகள் மறுசீரமைப்பு மீதான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மாசோதாவுக்கு ஆதரவாக 129 எம்.பி.கள் வாக்களித்தனர். எதிர்த்து 80 எம்.பி.கள் வாக்களித்தனர்.

இந்த மசோதாவை நிறைவேற்ற 111 எம்.பி.கள் வாக்குகள் இருந்தால் போதும் என்ற நிலையில் அரசாங்கம் எளிதாக மசோதாவுக்கு அங்கீகாரம் பெற்றது.

ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு ஆகிய இரு தரப்புகளையும் சேர்ந்த 14 எம்.பி.கள் இந்த மசோதா மீது விவாதம் நடத்தினர். பல்வேறு கட்சிகள் தெரிவித்துள்ள சில ஆட்சேபங்கள் குறித்து தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி சொன்னார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker