உலகம்

அசிங்கமான பெயரா? 50 கிராமங்களுக்கு ஆயுள் கால ‘அசத்தல்’ சலுகை!

லண்டன்,  மார்ச்.29- உலகம் முழுவதும் ஆபாச வார்த்தைகளைப் பெயர்களாக கொண்ட கிராமங்களுக்கு  ‘போர்ன்ஹப்’என்ற  பிரபல ஆபாச வலைத்தளம், ஆயுள் கால சலுகையாக ஆபாசப் படம் பார்க்க இலவச வாய்ப்பை வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அத்தகைய  கிராமங்களை ஒருங்கிணைந்து ‘போர்ன்ஹப்’  என்ற வலைத்தள நிறுவனம் பாலியல் வரைபடம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது.

ஆபாச பெயர்கள் இருப்பதால் தொடர்ந்து பொது மக்களால் கேலிக்கு உள்ளாக்கப் படுவதும் அந்நியர்களால் நகைப்புக்கு உள்ளாவதுமான அவதிப்படும் கிராமங்களைத் தெரிவு செய்து அந்த  கிராம மக்களை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக போர்ன்ஹப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது போன்ற கிராம மக்களுக்கு தங்கள் இணையத் தளத்தின்  வழி ஆயுள் முழுக்க ஆபாசப் படங்களை கண்டு களிக்கும் சலுகையை  அளிக்கப்போவதாக அது கூறியுள்ளது.

அது போன்ற ஆபாசப் பெயர்களைக் கொண்ட கிராமங்களை உலகெங்கிலும் பிரபலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் அது அறிவித்துள்ளது.  இந்நிறுவனம் தேர்வு செய்துள்ள 50 பகுதிகளில் குறிப்பாக, கனடா,  பிரிட்டன்,  ரஷ்யா ஆகிய நாடுகளில் ஆபாசமான பெயர்களைத் தாங்கிய பல கிராமங்கள் இருப்பதாக அது தெரிவித்தது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker