மலேசியா

இன்று வசந்தபிரியா மரண விசாரணை! ஆசிரியை சார்பில் வழக்கறிஞர் நியமனம்!

கோலாலம்பூர், மார்ச்.29- கைத்தொலைபேசிக் களவு தொடர்பாக, மாணவி வசந்த பிரியா தற்கொலை புரிந்து கொண்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு உதவ ஆசிரியர்களுக்கான தேசிய சங்கம் வழக்கறிஞர் ஒருவரை நியமித்துள்ளது.

இந்த மாணவியின் மரண விசாரணையில் ஆசிரியரின் சார்பில் விசாரணையைக் கண்காணிக்க வழக்கறிஞரை தாங்கள் அமர்த்தி இருப்பதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹர்ரி டான் தெரிவித்தார்.

‘நாங்கள் அந்த ஆசிரியைக்கு உதவுவோம். அவசியம் ஏற்பட்டால், ஆசிரியையை சங்கம் பிரதிநிக்கும்’ என்றார் அவர்.

நிபோங் திபால் இடைநிலையைப் பள்ளிச் சேர்ந்த 14 வயதுடைய வசந்தப் பிரியா, ஆசிரியையின் கைத்தொலைபேசி திருட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்ட பின்னர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சில தினங்களில் உயிர்நீத்தார்.

இவரது மரணம் குறித்த விசாரணை நாளை பினாங்கில் தொடங்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்ககது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker