மலேசியா

பணிப்பெண் கொடுமை: ரோஷித்தாவுக்கு 8 ஆண்டுகள் சிறை

ஷா ஆலம், மார்ச் 29 – இந்தோனிசியப் பணிப்பெண்ணை அடித்துத் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப் பட்டிருந்த வழக்கில் இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் டத்தின் ரோஷித்தா முகம்மட் அலி என்ற மாதுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறப்பட்டது.

டத்தின் ரோஷித்தாவுக்கு எதிராக முன்பு செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில்,  20 ஆயிரம் ரிங்கிட் ஜாமினில் 5 ஆண்டு காலத்திற்கு நன்னடத்தைக் கட்டுப்பாடு விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பில் விமர்சிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு போதுமான தண்டனையாக அமையவில்லை எனக்கூறி இணையத் தளம் ஒன்று 70 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் கையெழுத்து வேட்டை நடத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கில் செசன்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கத் தரப்பு உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி டத்தோ துன் அப்துல் மஜிட் துன், முன்பு செசன்ஸ் நீதிமன்றம் விதித்த நன்னடத்தை கட்டுப்பாடு  தீர்ப்பைத்  தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கில் டத்தின் ரோஷித்தா குற்றம் சாட்டை ஒப்புக் கொண்டார். இவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ துன் அப்துல் மாஜிட் துன் தீர்ப்புக் கூறினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலை 7 மணிக்கும் 12 மணிக்கும் இடையே 19 வயதுடைய பணிப்பெண்ணான சுயாந்தி சுட்ரின் சோ என்பவரை தலை, கை, கால் ஆகியவற்றில் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியதாக டத்தின் ரோஷித்தா மீது குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.

காய்கறி வெட்டும் கத்தி, இரும்புக் குழாய், துணி காய வைக்கும் ஹேங்கர்கள் மற்றும் குடை ஆகியவற்றினால் பணிப்பெண்ணை இவர் தாக்கிய தாகக் கூறப்பட்டது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker