மலேசியா

வசந்த பிரியா மரண விசாரணை! மே 24-25-ஆம் தேதிகளுக்கு மாற்றம்!

ஜோர்ஜ் டவுன், மார்சு. 30- ஆசிரியை ஒருவரின் கைத்தொலைப்பேசி களவு போனதன் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர்நீத்த எம்.வசந்த பிரியா தொடர்பான மரண விசாரணை எதிர்வரும் மே மாதம் 24- ஆம் மற்றும் 25 -ஆம் தேதிகளில் நடைபெறும்.

அந்த மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணை ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, தாம் நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்திருப்பதாக, காணாமல் போன கைத்தொலைபேசியின் உரிமையாளரான ஆசிரியையின் சார்பில் விசாரணையை கண்காணிக்க அமர்த்தப்பட்டுள்ள வழக்கறிஞர் வி.பார்த்திபன் தெரிவித்தார்.

அச்சம்பவம் தொடர்பில் எத்தனை சாட்சிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்ற தகவல் இல்லாத நிலையில், அந்த வழக்கு எவ்வளவு நாட்களுக்கு நடத்தப்படும் என்று தம்மால் கருத்துரைக்க முடியாது என்று மரண விசாரணை நடத்தும் நீதிபதி நோர்சால்ஹா ஹம்சா தெரிவித்தார்.

நிபோங் திபால் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 14 வயது  மாணவியான வசந்த பிரியாவின் சார்பிலோ அல்லது அந்த ஆசிரியையின் சார்பிலோ யாரும் இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவி வசந்த பிரியா தற்கொலை விவகாரம் தொடர்பில் மரண விசாரணை நீதிமன்றம் 30 பேருக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக  முன்பு பினாங்கு போலீஸ் படைத் தலைவர் டத்தோ தெய்வீகன் கூறினார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker