Latestவாழ்க்கை

அரவணைத்து ஆன்மீக ஆசிதரும் ‘அம்மா’ அமிர்தானந்தமயி மலேசிய வருகை!

கோலாலம்பூர், மார்ச் 4- அன்புக்குத் தடை இல்லை: தொலைவில்லை, தொலை தூரத்துச் சூரியனின் விடியல் முகங்கண்டு மலர்கின்ற பூக்களைப் போலவே அன்பின் இதம் கண்டு மனிதர்களின் மனங்கள் மலர்கின்றன என்பதால்  தமது பக்தர்களை உலகெங்கும் அன்பால் அரவணைக்கும்  ‘அம்மா’ஶ்ரீ மாதா அமிர்தானந்தமயி மலேசியாவுக்கு வருகை புரிகிறார்.

தன்னை நாடிவரும் பக்தர்களை அன்போடு ஆரத் தழுவி ஆன்மீக ஆசி அளித்து, ஆறுதல் வழங்குவதன் மூலம் அம்மா அமிர்தானந்தமயி பக்தர்களின் அன்பைப் பெற்றுத் திகழ்கிறார்.

கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, இன்றைக்கு உலகளாவிய ஆன்மீகச் சேவையால் மக்களின் மனங்களை கவர்ந்தவர்.  சிறுமியாக இருந்த காலந்தொட்டே சேவை செய்யும் உளப் பக்குவத்தில் ஊறித் திளைத்தவர்.

துயர்நிலையில் யாரும் வாழக்கூடாது, யாரும் ஆதரவற்று உழல்தல் கூடாது, உணவு, உடை, உறைவிடம், கல்வி, ஆரோக்கியக் குறைவால் அவதியுறக் கூடாது என்ற அம்மாவின் எண்ணத்தை நிறைவு செய்யும் நோக்கில் முதியோர், மாதர், குழந்தைகளை ஆதரித்து அரவணக்கும் இல்லங்களையும் கல்விக் கழங்களையும், சுகாரதார மையங்களையும் அர்ப்பணிப்பு உணர்வோடு நடத்தி வருகிறது அம்மா அமிர்தானந்தமயின் மடம்.

அம்மாவின் ஆசியுடன் மலேசியாவில் செயல்பட்டு வரும்  மலேசிய அமிர்தேஸ்வரி அறவாரியமும் பல்வேறு சமூகச் சேவைகளை மலேசிய மக்களுக்கு ஆற்றி வருகிறது. வசதி குறைந்தவர்களுக்கு இலவச பாலர் பள்ளி, உணவு உதவி, சுகாதாரச் சேவைகள் உள்ளிட்ட சேவைகளை அது வழங்கி வருகிறது.

அம்மா அமிர்தானந்தமயி, இம்மாதம்  மலேசியாவுக்கு வருகை புரியவிருக்கிறார். மலேசிய பக்தர்களுக்கு ஆரத்தழுவி ஆசி வழங்கவிருக்கிறார் என்று மலேசிய அமிதேஸ்வரி அறவாரியம் தெரிவித்தது.

அம்மா அமிர்தானந்தமயி தமது  பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி  கோலாலம்பூரில் மார்ச்  22 ஆம் தேதி பிற்பகல் 7.30 மணிக்குத் தொடங்கி, மைன்ஸ் இண்டர்நேஷனல் கன்வென்சன் சென்டரில் நடைபெறவிருக்கிறது.

கோலாலம்பூர் நிகழ்ச்சி குறித்த மேல் விபரங்களுக்கு  சசி பாலன்  -016- 222 9528,  ராஜேஸ்வரி  – 012 2922 494, சோங் செக் லீ  -012 390 9913 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்

அடுத்து, மார்ச் 24 ஆம் தேதி பினாங்கில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியிலும் அம்மா பக்தர்களுக்கு ஆசி வழங்கவிருக்கிறார். அன்றைய தினம் பிற்பகல் 6.30 மணி தொடங்கி  ஸ்பைஸ் அரினா அரினாவில் நடைபெறவுள்ளது. பினாங்கு நிகழ்ச்சி குறித்து கூடுதல் விபரம் அறிந்து கொள்ள விரும்புவோர், 012 4277 353 (காளிதாஸ்) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker