மலேசியா

கணவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வீர்! –மகளிருக்கு ரோஸ்மா யோசனை!

ஷா ஆலம், ஏப்ரல். 1 –தங்களின் கணவன்மார்களை பெண்கள் எப்போதுமே சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமரின் துணைவியான டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் வேண்டுகொள் விடுத்தார்.

திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வதற்கு இதுதான் முக்கிய அம்சம். என்னைப் பொறுத்த வரையில் என் கணவர் சந்தோஷமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். அவரும் ஒரு சந்தோஷமான மனிதர்.  எனவே, பிரதமர் என்ற முறையில் அவர் தமது கடமைகளைச் சரிவரச் செய்ய முடிகிறது என்று அவர் சொன்னார்.

ஒரே மலேசியா சக்தி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய மகளிர் தினக்கூட்டத்தின் தொடக்க விழவில் அவர் பேசினார். இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான இந்திய மகளிர்கள் கலந்து கொண்டனர்.

‘எனக்கு எதிராக வீசப்படும் எந்தக் குற்றச் சாட்டுகளையும் அபவாதங்களையும் திறந்த மனதோடு, புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில், இவை அரசியலில் எப்போதுமே வழக்கமான ஒன்றுதான் என்றார் அவர்.

அரசியலில், இதையெல்லாம் புன்னகையோடு சந்திக்க வேண்டும். நம்மை குறை கூறுகிறவர்களுக்கு இந்தப் புன்னகைதான் சிறந்த மருந்து. நாம் அவர்களைப் பார்த்து புன்னகைத்தால் அவர்கள் எரிச்சலடைவார்கள். மாறாக, நாம் கோபம் அடைந்தால், அவர்கள் சந்தோஷப்படுவார்கள் என்று டத்தின்ஶ்ரீ ரோஸ்மா குறிப்பிட்டார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker