இந்தியா

மணக்கோலம் கலையும் முன்பே ஒரு மணமகனின் பிணக்கோலம்! -(VIDEO)

ஜெய்ப்பூர், மார்ச்.31-  ராஜஸ்தானில்  தனது திருமண வைபவத்தின் போது மணப்பெண்ணுடன் மேடையில்  நடனமாடிக் கொண்டிருந்த மணமகன் அங்கேயே மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

3 Sources: youTube video

ராஜஸ்தானில் பிரபல தங்கும் விடுதியில்  திருமண வரவேற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. காலையில் திருமணம் நடந்து முடிந்து  இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடந்துக் கொண்டிருந்தது.

அப்போது இருந்து துஜே தேகா செய்ய ஜானா சனம் என்ற  பிரபலப் பாடல் ஒலித்தது. இந்தப் பாடலுக்கு மணமக்களை நடனம் ஆடும் படி அவர்களின் நண்பர்கள் வற்புறுத்தினர்.

இதனால் இருவரும் அந்த பாடலுக்கு சந்தோஷமாக புது மணத்தம்பதிகள் நடனமாடினர். ஆனால் அது தான் அவர்களின் இந்த நடனம் தான் இறுதி நடனம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

நடனமாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மேடையிலே மயங்கி  மணமகன் விழுந்து  அவ்விடத்திலேயே  உயிரிழந்தார்.

மணமகன் கீழே சரிந்து விழுந்த போது கூட  தன்னுடைய மணவாளன் கால் தடுக்கி கீழே விழுந்து விட்டதாக கருதி, சிரித்துக் கொண்டே அருகில் சென்ற மணமகள், கையைப் பிடித்து இழுத்து மீண்டும் நடனத்திற்கு அழைத்த  அவர்  எழாத போது அதிர்ச்சி அடைந்தார். அங்கேயே மணமகன்  இறந்து விட்டதை அறிந்து மனமகள் மற்றும் உற்றார் உறவினர்கள் கதறிய அழுதனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker