மலேசியா

மலேசியாவில் டோயோட்டா கார்களின் ‘காற்றுப் பை’கோளாறு! சீரமைப்பு!

கோலாலம்பூர், ஏப்ரல்.2- மலேசியாவில் விற்பனை செய்யப்பட்ட டோயோட்டா வியோஸ், கொரோல்லா ஆல்டீஸ் மற்றும் அல்ஃபாட் ரகக் கார்களின் பயணிகளின் இருக்கைக்கு முன் பூட்டப்பட்டுள்ள ‘காற்றுப் பைகளை’ மாற்றி அமைக்கும் சிறப்புச் சேவை இன்னும் சில காலங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மலேசிய டோயோட்டா  நிறுவனமான  யு.எம்.டபள்யு  டோயோட்டா மோட்டர்ஸ்  அறிவித்துள்ளது.

அதிக வெப்பநிலை, ஈரப்பதம் போன்ற சூழ்நிலைகளில், அந்தக் கார்களின் காற்றுப் பைகளில் கோளாறுகள் ஏற்படக் கூடும் என்ற அடிப்படையில், குறிப்பிட்ட அந்தக் கார்களின் காற்றுப் பைகளை மாற்றியமைக்கும் சிறப்புச் சேவையை டோயோட்டா  நிறுவனம் வழங்கி வருகிறது.

“அதிக வெப்பநிலை அல்லது அதிக ஈரப்பதம் கார்களில் ஏற்படும் போது, காரினுள் உள்ள ஒருவகை உலோகம், அந்தக் காற்றுப் பைகளின் வாயிலாக ஊடுறுவக் கூடும். அப்போது, அந்தக் காற்றுப் பை வேகமாக வெடிக்கக் கூடும். இதனால், விரும்பத்தகாத விபத்து அல்லது மரணம் கூட ஏற்படலாம்” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, சுமார் 21,000 கார்களை UMW Toyota Motors நிறுவனம் விற்பனைச் செய்துள்ளது. அந்தக் கார்களின் உரிமையாளர்கள், தங்களின் கார்களை தொயோத்தா சேவை மையங்களுக்கு எடுத்து வருமாறு யு.எம்.டபள்யு  டோயோட்டா மோட்டர்ஸ்   அவர்களை தொடர்புக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சிறப்புச் சேவையானது 1 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரத்திற்குள் செய்துத் தரப்படும். அனைத்து செலவுகளையும், யு.எம்.டபள்யு  டோயோட்டா மோட்டர்ஸ்   நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  விபரம் தெரிந்துக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் 1800-8-869682 என்ற எண்ணில் தொயோத்தா நிறுவனத்தை அழைக்கலாம்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker