இந்தியா

தமிழக அரசுக்கு ஆபத்தா? ஆளுனர் டில்லி விரைந்தார்!

சென்னைஏப்.3-தமிழகக்த்தில் பல்வேறு பிரச்னைகள் அரசியல் ரீதியாக வெடிக்கும் அபாயம் நிலவும் நிலையில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசாங்கம் அவசரமாக டில்லிக்கு அழைத்திருக்கிறது.

தமிழகத்தில் தற்போது எத்தனை  பிரச்சினைகளுக்காக போராட்டம் நடந்து வருகின்றனஒரு பக்கம் காவிரி மேலாண்மை வாரியம்இன்னொரு பக்கம் ஸ்டெர்லைட்,  ஒரு பக்கம் நியூட்ரியோனா திட்டம்இன்னொரு பக்கம் நெடுவாசல்ஒரு பக்கம் திரையுலகினர்,  இன்னொரு பக்கம் காப்புறுதி கட்டணத்தை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் என்று எந்தப் பக்கம் பார்த்தலும் போராட்டம் தான் நடந்து வருகிறது.

மேலும் மெரினாவில் எந்த நேரத்திலும் ஜல்லிக்கட்டு போல் ஒரு புரட்சி வெடிக்குமென அஞ்சப்படுகிறது.

இத்தனை போராட்டங்களையும் .சமாளிக்க வேண்டும்மாநில அரசும் உண்ணாவிரதப் போராட்டங்களை அறிவித்துள்ளதுஇதனால் தமிழகம் முழுவதுமே கடந்த சில நாட்களாக பரபரப்பில் உள்ளது.

இந்நிலையில்,  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  அவசரமாக  டில்லிக்கு  புறப்பட்டார்.

அதற்கு முன்னதாக ஆளுனர்  நேற்று தலைமைச் செயலாளர்உள்துறை செயலாளர்டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

 

மேலும் மத்திய அரசு மீதுதமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளதால் தமிழக அரசுக்கு ஆபத்தாஎன்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker